/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நம்மூர் மண்ணிலும் பச்சை வாழை சாகுபடி
/
நம்மூர் மண்ணிலும் பச்சை வாழை சாகுபடி
PUBLISHED ON : ஏப் 23, 2025

பச்சை நிற வாழை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம். குமரவேல் கூறியதாவது:
நெல் வயலையொட்டி, தேனி, கம்பம் ஆகிய பகுதிகளில் விளையும் பச்சை நிற வாழை சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் சவுடு கலந்த களிமண்ணுக்கு அருமையாக வளர்கிறது. உரம் மற்றும் நீர் நிர்வாகம் முறையாக கையாளும் போது, நாம் எதிர்பார்த்த மகசூலை எடுக்கலாம்.
குறிப்பாக, தேனி, கம்பம் ஆகிய குளிர்பிரதேச பகுதிகளில் விளையும் பச்சை நிற வாழை, நம்மூர் சீதோஷண நிலைக்கும் நல்ல மகசூல் தருகிறது.
இருந்தாலும், குளிர் பிரதேசங்களில் மரம் எவ்வளவு நீளம் இருக்கிறதோ அதே அளவிற்கு வாழைத்தார் நீளமாக இருக்கும். நம்மூர் சவுடு கலந்த களிமண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு விதமான மண்ணாக இருந்தாலும், வாழைத்தார் நீளம் குறைவாகவும், பழங்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும்.
உதாரணமாக, தேனி, கம்பம் பகுதிகளில் விளையும் பச்சை வாழைத்தாரில் 10 சீப் பச்சை வாழைப்பழங்கள் மகசூல் பெறலாம். நம்மூர் சீதோஷண நிலைக்கு ஐந்து சீப் வாழைப்பழங்கள் மட்டுமே மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.குமரவேல், 80720 06681.