/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கணிசமான வருவாய்க்கு களர் பாலை ரக நெல்
/
கணிசமான வருவாய்க்கு களர் பாலை ரக நெல்
PUBLISHED ON : மார் 19, 2025

களர் பாலை ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
செம்மண் நிலத்தில், பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மணல் கலந்த களிமண் நிலத்தில், களர் பாலை ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
இந்த ரக நெல், 108 நாட்களில் மகசூலுக்கு வரும். பருவ நிலை பொறுத்து சில நாட்கள் அதிகமாகும். குறிப்பாக, காரத்தன்மை இருக்கும் களர் உவர் நிலத்திலும் இந்த ரக நெல் சாகுபடி செய்யலாம். மேலும், நவரை பருவத்திற்கு ஏற்ற ரகம்.
இந்த ரக நெல் சாகுபடியில், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நெல் கறுப்பு நிறத்திலும், செம்மண் நிறத்திலும் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.
ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டைகள் வரையில் மட்டுமே நெல் மகசூல் பெற முடியும். இதை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது, கணிசமான வருவாய் பெற வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:நீலபூ.கங்காதரன்,
96551 56968.