/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பூச்சி தாக்குதல் இல்லாத தேங்காய் பூ ரக சம்பா நெல்
/
பூச்சி தாக்குதல் இல்லாத தேங்காய் பூ ரக சம்பா நெல்
PUBLISHED ON : மார் 26, 2025

தேங்காய் பூ ரக சம்பா நெல் குறித்து செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த, நீலமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், தேங்காய் பூ சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.
இந்த நெல் மோட்டா ரகமாகும் இது, 130 நாட்களில் அறுவடைக்கு வரும். பருவ நிலையை பொறுத்து சில நாட்களின் எண்ணிக்கை கூடுதலாகும், குறைவான நாட்களிலும் அறுவடை செய்யலாம்.
இந்த தேங்காய் பூ ரக சம்பா நெல், தென்னம் பாலையில் அடுக்கடுக்காக காய்க்கும் தென்னை போல, இந்த ரகநெல்லும் அடுக்கடுக்காக இருக்கும்.
குறிப்பாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நெல் மஞ்சளாகவும், இதன் அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.
ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டைகள் வரையில் மட்டுமே நெல் மகசூல் பெற முடியும். இதை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது, கணிசமான வருவாய் பெற வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,
96551 56968.