/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வெள்ளை நுாற்புழு தாக்கிய நெற்கதிரை கட்டுப்படுத்த வழி
/
வெள்ளை நுாற்புழு தாக்கிய நெற்கதிரை கட்டுப்படுத்த வழி
வெள்ளை நுாற்புழு தாக்கிய நெற்கதிரை கட்டுப்படுத்த வழி
வெள்ளை நுாற்புழு தாக்கிய நெற்கதிரை கட்டுப்படுத்த வழி
PUBLISHED ON : மார் 27, 2024

நெல்லில் வெள்ளை நுாற்புழு கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
நெல் சாகுபடியில், வெள்ளை முனை நுாற்புழு தாக்கம் அதிகமாக காணப்படும். இந்நுாற்புழுக்கள், இலை மீது அமர்ந்து, நெல் மணிகளை உண்பதால், நெல்லின் இலை வெள்ளையாகி விடுகிறது.
நெல் இலைகள் சுருங்கி விடும். ஒட்டுண்ணியாக இருந்து, பசுமையான நெற்கதிர்களை உண்ண துவங்கும். இது, சேமித்து வைக்கப்பட்ட நெல்லில் பல ஆண்டுகள் உயிர் வாழும் தன்மை உடையது.இதை தவிர்க்க, ஒரு கிலோ விதை நெல்லுக்கு, 2 கிராம் கார்பன் டெசின், பினோமெயில், பூஞ்சாண கொல்லி மூலமாக விதை நேர்த்தி செய்யலாம். கார்போப்யூரான்- 3ஜி, பியூரடான், கார்டா பை ஹைட்ரோ குளோரைடு ஒரு கிலோவை, இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு, நாற்று நடவு செய்து, 45 நாள் கழித்து வயலுக்கு இட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
திரூர் நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளூர்.
97910 15355.