Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி

ஆற்றில் மூழ்கி 2 யானைகள் பலி


ADDED : நவ 10, 2025 04:21 AM

Follow on Google

ADDED : நவ 10, 2025 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: கனகபுராவின், அர்க்காவதி ஆற்றில் உணவு தேடி வந்த இரண்டு காட்டு யானைகள், நீரில் மூழ்கி உயிரிழந்தன.

பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவின் சாத்தனுார் வன மண்டலத்தின், குன்னுாரில் உள்ள அர்க்காவதி ஆற்று பகுதியில், நேற்று முன் தினம் இரவு, இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி வந்தன. ஆற்றை கடப்பதற்காக நீரில் இறங்கின.

நீரில் ஏராளமான களைகள் வளர்ந்திருந்தன. இந்த கொடிகள் யானைகளின் கால்களில் சிக்கிக்கொண்டன. முன்னோக்கி செல்ல முடியவில்லை. பின்னுக்கும் நகர முடியவில்லை. நீரில் இருந்து வெளியே வர முடியாமல், மூழ்கி உயிரிழந்தன.

நேற்று காலை அப்பகுதியினர், நீருக்குள் இருந்த யானைகளை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யானைகளை காப்பாற்ற முற்பட்ட போது, இறந்துவிட்டது தெரிந்தது. இவற்றின் உடல்களை வெளியே கொண்டு வரும் பணி நடக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு யானைகள் இறந்ததால், விலங்கு ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap