Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'போக்சோ' வழக்கில் மடாதிபதி கைது

 'போக்சோ' வழக்கில் மடாதிபதி கைது

 'போக்சோ' வழக்கில் மடாதிபதி கைது


ADDED : மார் 06, 2026 05:38 AM

Follow on Google

ADDED : மார் 06, 2026 05:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாத்கிர்: 'போக்சோ' வழக்கில் விசாரணைக்கு ஆஜரான மடாதிபதியை போலீசார் கைது செய்தனர்.

யாத்கிர், ஷாஹாபூர் தாலுகா யமனுாரப்பா முத்யா மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் மல்லிகார்ஜுன முத்யா, 26. இவர் சில ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் மூலம் பெரும் பிரபலமானார்.

இவர், தன்னை தானே கடவுள் என அறிவித்துக் கொண்டார். இவரை பலரும் பின் தொடர்கின்றனர். இவரை 'அப்பாஜி' எனவும், அவரது பக்தர்கள் அழைக்கின்றனர்.

இவர் தனது மடத்திற்கு கடந்த 19ம் தேதி வந்த, 14 வயது சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முத்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி அறிவுறுத்தியது.

கடந்த மாதம் 25ம் தேதி கோகி போலீஸ் நிலையத்தில் அவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. பின், அவர் தலைமறைவானார்.

சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை எனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவேன் எனவும் வீடியோ வெளியிட்டார். இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளையில் முத்யா தரப்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அவர்களே தங்கள் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று கோகி போலீஸ் நிலையத்தில் மல்லிகார்ஜுன முத்யா விசாரணைக்கு ஆஜரானார். அவரை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷரணகவுடா விசாரித்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின், விசாரணை தொடர்ந்தது. அவரது மொபைல் போன் சோதனை செய்யப்பட்டது. பின், அவர் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap