Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நீதிமன்ற உத்தரவை மீறி மைசூரு சாமுண்டி மலையில் நடந்த மேம்பாட்டு பணிக்கு தடை விதித்தது ஐகோர்ட்

 நீதிமன்ற உத்தரவை மீறி மைசூரு சாமுண்டி மலையில் நடந்த மேம்பாட்டு பணிக்கு தடை விதித்தது ஐகோர்ட்

 நீதிமன்ற உத்தரவை மீறி மைசூரு சாமுண்டி மலையில் நடந்த மேம்பாட்டு பணிக்கு தடை விதித்தது ஐகோர்ட்


ADDED : ஏப் 11, 2026 04:16 AM

Follow on Google

ADDED : ஏப் 11, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அளித்த வாக்குறுதியை மீறி, மைசூரில் உள்ள சாமுண்டி மலை கோவில் வளாகத்தில், கட்டுமான பணிகளை தொடரும் மாநில அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த, கர்நாடக உயர் நீதிமன்றம், நடந்து வரும் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

மைசூரு சாமுண்டி மலையில், இயற்கை தன்மைக்கு கேடு விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு, நீதிபதி சச்சின் சங்கர் மாகடம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் கூறியதாவது:

கோவில் வளாகத்தில் நடந்து வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இப்பணிகளுக்காக மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட, 47 கோடி ரூபாயில், எவ்வளவு செலவழிக்கப்பட்டு உள்ளது.

எந்தெந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்ட்டது என்பது குறித்து, விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள், கலெக்டர் சமர்ப்பிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் எந்தவொரு செயலும் கடுமையான அவமதிப்பாக கருதப்படும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எந்த நிரந்தர பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று, மாநில அரசு முன்னதாக உறுதி அளித்திருந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால், கோவில் வளாகத்தில் பெரிய அளவிலான நிரந்தர கட்டுமான பணிகள் நடந்து வருவது தெளிவாக தெரிகிறது.

மத்திய அரசிடம் இருந்து, 47 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டதை காரணம் காட்டி, கட்டுமான பணிகளை நியாயப்படுத்திய மாவட்ட கலெக்டரின் செயல் உள்நோக்கம் கொண்டது. அது மட்டுமின்றி, சட்டப்படி முற்றி லும் நியாயப்படுத்த முடியாது. கலெக்டர், ஒரு மாநில அதிகாரி. நீதிமன்றத்தின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவது அவரது முதன்மையா ன க டமையாகும்.

உத்தரவுகளை பின்பற்றாததை நியாயப்படுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் நீதித்துறை அதிகாரத்தின் அப்பட்டமான மீறலாகும். நிதி அனுமதி என்பது நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதற்கான உரிமத்தை வழங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap