தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாம்ராஜ் நகர் சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை, வெள்ளை மான்

 சாம்ராஜ் நகர் சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை, வெள்ளை மான்

 சாம்ராஜ் நகர் சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை, வெள்ளை மான்


ADDED : மே 03, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 02:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகரில் உள்ள மலை மஹாதேஸ்வரா வன வி லங்கு சரணாலயத்தில், அரிய வகை வெள்ளை மான், கருஞ்சிறுத்தையால் சுற்றுலா பயணியர் பரவசம் அடைந்தனர்.

மைசூரில் உள்ள நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் மட்டுமே, கருஞ்சிறுத்தை தென்படும். ஆனால், கடந்த நான்கு நாட்களுக்கு முன் சாம்ராஜ் நகர் ஹனுார் தாலுகாவின் பி.ஜி., பாளையா சபாரியிலும் கருஞ்சிறுத்தை தென்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் இரு கருஞ்சிறுத்தைகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவதை சுற்றுலா பயணியர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். அதேபோன்று, சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுார் தாலுகாவில் உள்ள மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்தில், நேற்று முன்தினம் வெள்ளை நிற மான் ஒன்று தென்பட்டது.

சபாரியின் போது புலி, காட்டெருமை மற்றும் யானைகளை மட்டுமே பார்த்திருந்த சுற்றுலா பயணியர், முதன் முறையாக வெள்ளை மானையும், கருஞ்சிறுத்தையையும் பார்த்து பூரிப்படைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us