sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'பிரேக் பாஸ்ட்' டீசர் தான்: பசவராஜ் பொம்மை கிண்டல்

/

 'பிரேக் பாஸ்ட்' டீசர் தான்: பசவராஜ் பொம்மை கிண்டல்

 'பிரேக் பாஸ்ட்' டீசர் தான்: பசவராஜ் பொம்மை கிண்டல்

 'பிரேக் பாஸ்ட்' டீசர் தான்: பசவராஜ் பொம்மை கிண்டல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: ''முதல்வர், துணை முதல்வர் இடையிலான, 'பிரேக் பாஸ்ட் மீட்டிங்' வெறும் டீசர் தான். முழு சினிமா இனி திரைக்கு வரும்,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை கூறினார்.

டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தனித்தனியாக பிரேக் பாஸ்ட் மீட்டிங் நடத்தி, காலத்தை வீணாக்குகின்றனர்.

மாநில மக்களின் நலனில் அக்கறை காட்டுவது யார் என்பதே, எங்களின் கவலையாகும். இவர்களின் பிரேக் பாஸ்ட் மீட்டிங் வெறும் டீசர் மட்டுமே. வரும் நாட்களில் முழு திரைப்படம் வெளியாகும்.

ஒருவர் நாற்காலியை பறிக் க முயற்சிக்கிறார். மற்றொருவர் தக்க வைக்க முயற்சிக்கிறார். கர்நாடக காங்கிரஸ் அரசு, நாடகத்தை நிறுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கர்நாடகாவில் காங்., அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகளாகிறது. காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்தை நிவர்த்தி செய்வதில், அக்கட்சி மேலிடம் தோற்றுள்ளதாகவே தோன்றுகிறது.

எங்குள்ளது கட்சி மேலிடம். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இயலாமையை தெரிவித்துள்ளார் என்றால், மேலிடம் இருப்பதில் அர்த்தமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -




    • Dinamalar Events


    Dinamalar