/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முனிரத்னாவை பார்த்தாலே பயம் காங்கிரஸ் ஹரிஷ் கவுடா அலறல்
/
முனிரத்னாவை பார்த்தாலே பயம் காங்கிரஸ் ஹரிஷ் கவுடா அலறல்
முனிரத்னாவை பார்த்தாலே பயம் காங்கிரஸ் ஹரிஷ் கவுடா அலறல்
முனிரத்னாவை பார்த்தாலே பயம் காங்கிரஸ் ஹரிஷ் கவுடா அலறல்
ADDED : மார் 26, 2025 05:10 AM

மைசூரு, : ''பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னாவை பார்த்தாலே பயமாக உள்ளது,'' என, சாமராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் ராஜண்ணாவை ஹனிடிராப் செய்ய முயன்றதன் பின்னணியில், துணை முதல்வர் சிவகுமார் உள்ளார் என, பா.ஜ., தலைவர்கள் குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. ஹனிடிராப் பின்னணியில் மத்திய அமைச்சர் ஒருவர் தான் சூத்திரதாரி.
ஆறு மாதங்களுக்கு முன்பு என்னை ஹனிடிராப் செய்ய முயற்சி நடந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். மைசூரை சேர்ந்த தொழில் அதிபர்கள், பேராசிரியர்களை ஒரு கும்பல் ஹனிடிராப் செய்ய முயற்சிக்கிறது.
அரசியலில் எதிரிகளை நேருக்கு நேர் வீழ்த்த வேண்டும். அதை விட்டுவிட்டு கோழைத்தனமான செயல்களை யாரும் செய்யக்கூடாது. இப்போது உள்ள அரசியலை பார்த்தால், அரசியலே நமக்கு தேவையில்லை என்று தோன்றுகிறது. அரசியல் என்பது சாக்கடையில் விழுவது போன்று ஆகிவிட்டது.
பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னா, சிவகுமாரை குற்றஞ்சாட்டி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
முனிரத்னாவை பார்த்தாலே எனக்கு பயமாக உள்ளது. யாருக்காவது எச்.ஐ.வி., வைரஸ் ஊசி போட்டு விடுவாரோ என்று பயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.