sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கிரைம் கார்னர்

/

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தர கன்னடா தண்டேலி அருகே பைலாபரு கிராமத்தில் வசிப்பவர் 60 வயது மூதாட்டி. கடந்த 12 ம் தேதி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி வழியாக நடந்து சென்றார். அங்கு வந்த குலாகி கிராமத்தின் பைரோஸ், 23 என்பவர், மூதாட்டியை மிரட்டி பலாத்காரம் செய்ததுடன், மொபைல் போன், 5,000 ரூபாயை பறித்தார். குலாகி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். போலீஸ்காரர் ஒருவரை கல்லால் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், பைரோஸ் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு, எஸ்.ஐ., கிரண் பாட்டீல் பிடித்தார்.

ஹாசன் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் நோயாளி ஒருவரின் உறவினர் மொபைல் போனை திருடினார். மருத்துவமனை காவலாளிகள், அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். மருத்துவமனை வெளியே அழைத்து வந்து தங்கள் கையில் வைத்திருந்த தடியால் தாக்கினர். வாலிபரை தாக்கியதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.

பெங்களூரின் சிக்கஜாலாவில் வசிப்பவர் சந்தன், 26. தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 20 ம் தேதி தனது நண்பர்களான பவன், அச்சலுடன் பாருக்கு சென்றார். மூன்று பேரும் குடித்துவிட்டு வரும் போது, சந்தனை தாக்கிய ஒரு கும்பல் அவர் அணிந்திருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில் பிரேம் ஷெட்டி என்பவரை, நேற்று முன்தினம் சிக்கஜாலா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பிரேமும், பவனும் நண்பர்கள் என்பதும், பவன் கூறியதால் தான் சந்தனிடம் கொள்ளையடித்ததும் தெரிந்தது. தலைமறைவாக உள்ள பவன், அச்சலை போலீசார் தேடுகின்றனர்.

நண்பரிடமே கொள்ளை






    • Dinamalar Events


    Dinamalar