/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடனை கேட்டவர் வீட்டுக்கு தீவைப்பு
/
கடனை கேட்டவர் வீட்டுக்கு தீவைப்பு
ADDED : ஜூலை 04, 2025 11:21 PM
விவேக் நகர்: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவர் வீட்டுக்கு கடன் வாங்கியவர் தீவைத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெங்களூரு, விவேக்நகரின், 2வது பிரதான சாலையில் வசிப்பவர் வெங்கட ரமணி. இவரிடம் சுப்ரமணி என்பவரின் சகோதரி பார்வதி, தன் மகளின் திருமணத்துக்காக, ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். பணம் வாங்கி ஏழெட்டு ஆண்டுகளாகியும், திருப்பித் தராமல் இழுத்தடித்தார்.
பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதால், பார்வதியும், அவரது மகளும் வெங்கட ரமணியின் வீட்டுக்கு சென்று, கொலை மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமின்றி, சுப்ரமணியும் ஜூலை 1ம் தேதியன்று, மாலை 5:00 மணிக்கு வெங்கட ரமணியின் வீட்டுக்கு சென்று, கதவருகில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
வீட்டின் முன்பகுதி மற்றும் ஜன்னல் எரிந்தது. வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து, வெங்கட ரமணி அளித்த புகாரின்படி, சுப்ரமணி, அவரது சகோதரி பார்வதி, அவரது மகள் மஹாலட்சுமி ஆகியோர் மீது விவேக்நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.