Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யானை அட்டகாசம் கிராமத்தினர் பீதி

 யானை அட்டகாசம் கிராமத்தினர் பீதி

 யானை அட்டகாசம் கிராமத்தினர் பீதி


ADDED : மார் 25, 2026 07:10 AM

Follow on Google

ADDED : மார் 25, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: இரவு நேரங்களில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரே தாலுகாவில் உள்ள குண்டூர் கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக ஒற்றை காட்டு யானை தொல்லைகொடுத்து வருகிறது.

இதனால், கிராமத்தினர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். பெரும்பாலும் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை, விளை நிலங்கள் மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து, வனத்துறையினருக்கு கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். ஆனால், வனத்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை மீண்டும் கிராமத்திற்குள் புகுந்தது. தகவல் அறிந்த கிராமத்தினர், சத்தமாக ஒலி எழுப்பி, வெடி வெடித்து யானையை திசை திருப்பும் முயற்சியில் இறங்கினர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின், யானை கிராமத்தை விட்டு வெளியேறியது. இருப்பினும், யானை காட்டுக்குள் செல்லாமல் கிராமத்திற்கே வெளியே உள்ள வயல் வெளியில் தஞ்சம் அடைந்து உள்ளது.

யானையை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap