Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பேச்சு மூலம் வழக்கை முடித்து கொள்ளுங்கள் குமாரசாமி - ஐ.பி.எஸ்.,சுக்கு ஐகோர்ட் அறிவுரை

 பேச்சு மூலம் வழக்கை முடித்து கொள்ளுங்கள் குமாரசாமி - ஐ.பி.எஸ்.,சுக்கு ஐகோர்ட் அறிவுரை

 பேச்சு மூலம் வழக்கை முடித்து கொள்ளுங்கள் குமாரசாமி - ஐ.பி.எஸ்.,சுக்கு ஐகோர்ட் அறிவுரை


ADDED : பிப் 13, 2026 05:33 AM

Follow on Google

ADDED : பிப் 13, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட சிலருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எந்தவித சாக்குபோக்கு சொல்லாமல், பேச்சு மூலம் முடிவுக்கு கொண்டு வர முடியுமா என்பதை ஆராய்ந்து தெரிவிக்கும்படி, லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த சந்திரசேகருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'சாய் மினரல்ஸ்' நிறுவனத்துக்கு சுரங்க குத்தகை வழங்கிய குற்றச்சாட்டில், மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கும்படி, லோக் ஆயுக்தா சிறப்பு விசாரணை குழு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த சந்திரசேகர், கவர்னருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக, குமாரசாமி, நிகில், எம்.எல்.ஏ., சுரேஷ் பாபு ஆகியோர் சந்திரசேகர் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இது தொடர்பாக, சஞ்சய் நகர் போலீசில், சந்திரசேகர் புகார் அளித்தார். இதையடு த்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யு ம்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மூ வரும் மனு தாக்கல் செய் திருந்தனர்.

இம்மனு, நீதிபதி சுனில் தத்தா யாதவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:

இவ்வழக்கில் இரு தரப்பினரும் பொறுப்பான பதவிகளை வகிக்கின்றனர். வழக்கை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. உலகம் மிகவும் சிறியது. இரு தரப்பினரும் பொது களத்தில் உள்ளனர். ஒரு நாள் சந்திக்க நேரிடும்.

எனவே, இவ்விஷயத்தை தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ளாமல், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கலாம். சில நேரங்களில் சில வார்த்தைகள் நம்மை அறியாமல் வந்துவிடும். இதை இனி மாற்ற முடியாது. இரு தரப்பினரும் நிபந்தனைகள் மூலம் இதை முடிவுக்கு கொண்டு வரலாம். கடந்த காலத்தில் நடந்ததை நினைத்து நியாயப்படுத்துவதற்கு பதில், பொருத்தமான முடிவு எடுக்கலாம். முடிந்த வரை வழக்கை முடிப்பது பற்றி இரு தரப்பினரும் சிந்திக்க வேண்டும். இதை சுயமரியாதை பிரச்னையாக கருத வேண்டியதில்லை. சமரசம் மூலம் முடித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே மனுதாரரின் வக்கீல், இவ்விஷயத்தில் மனுதாரர்களுடன் விவாதித்து முடிவை தெரிவியுங்கள்.

அதுவரை 'மனுதாரர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க கூடாது' என்ற முந்தைய உத்தரவு தொடரும். வழக்கு விசாரணை பிப்., 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap