/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கருவை கலைக்க கூறி துன்புறுத்தினார்: உடற்கல்வி ஆசிரியர் மீது காதலி 'பகீர்'
/
கருவை கலைக்க கூறி துன்புறுத்தினார்: உடற்கல்வி ஆசிரியர் மீது காதலி 'பகீர்'
கருவை கலைக்க கூறி துன்புறுத்தினார்: உடற்கல்வி ஆசிரியர் மீது காதலி 'பகீர்'
கருவை கலைக்க கூறி துன்புறுத்தினார்: உடற்கல்வி ஆசிரியர் மீது காதலி 'பகீர்'
ADDED : செப் 25, 2025 11:07 PM
கோனனகுண்டே:''வயிற்றில் வளரும் கருவை கலைக்கும்படி உடற்கல்வி ஆசிரியர் தன்னை துன்புறுத்தினார்,'' என்று, கணவரை விவாகரத்து செய்த பெண், குற்றம் சாட்டி உள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் மேத்யூ, 35. பெங்களூரு கோனனகுண்டேயில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்தார். கிரிக்கெட் பயிற்சியாளராகவும் உள்ளார். இவருக்கும், பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுமியின் தாய் லீலா, 33 என்பவருக்கும், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. லீலா, கணவரை விவாகரத்து செய்தவர்.
மேத்யூவும், லீலாவும் காதலித்தனர். திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல வாழ்ந்தனர். லீலா கர்ப்பம் அடைந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேத்யூவும், அவரது பெற்றோரும் பெங்களூரில் இருந்து தலைமறைவாகினர்.
இதனால், தன்னை ஏமாற்றி விட்டதாக கருதி, மேத்யூ மீது, கோனனகுண்டே போலீசில் லீலா புகார் செய்தார்.
நியாயம் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா புகாரை வாங்காததால், மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். மகளிர் ஆணையத்தின் உத்தரவின்படி, மேத்யூ மீது கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. இதுகுறித்து, லீலா நேற்று கூறியதாவது:
நானும், மேத்யூவும் கோவிலில் மாலை மாற்றி கொண்டோம். ஆனால், திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒன்றரை ஆண்டுகளாக, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தோம். கடந்த ஏப்ரல் மாதம், மேத்யூவின் மொபைல் போனை பார்த்த போது, நிறைய பெண்களுடன் அவர் ஆபாசமாக எடுத்து கொண்ட 2,500 புகைப்படங்கள் இருந்தன. பிற்காலத்தில் எனக்கு பிரச்னை வந்தால், இந்த படங்கள் உதவியாக இருக்கும் என கருதி, என் மொபைல் போனில் சேகரித்து வைத்து கொண்டேன். படங்கள் பற்றி அவரிடம் கேட்ட போது, 'எனது மொபைல் போனை எதற்காக எடுத்து பார்த்தாய்; அதில் இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட அழிக்க கூடாது' என்று என்னை மிரட்டினார்.
பின், என் கண்முன்பே ஆபாச புகைப்படங்களை அழித்தார். அந்த படங்கள், இப்போது எனக்கு பயன்படுகிறது.
என் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கூறி, மேத்யூவும், அவரது பெற்றோரும் என்னை துன்புறுத்தினர். மேத்யூவுடன் உறவில் இருந்து கொள்; ஆனால் திருமணம் செய்ய கூடாது என்று, அவரது பெற்றோர் என்னிடம் கூறினர். என்னை போல பல பெண்களை மேத்யூ ஏமாற்றி உள்ளார். அந்த பெண்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.