/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியின் தலைவி பதவி பறிப்பு காங்., ஆபிசுக்கு தீவைத்த கணவர் கைது
/
மனைவியின் தலைவி பதவி பறிப்பு காங்., ஆபிசுக்கு தீவைத்த கணவர் கைது
மனைவியின் தலைவி பதவி பறிப்பு காங்., ஆபிசுக்கு தீவைத்த கணவர் கைது
மனைவியின் தலைவி பதவி பறிப்பு காங்., ஆபிசுக்கு தீவைத்த கணவர் கைது
ADDED : மே 27, 2025 12:15 AM

யாத்கிர் : மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பதவியை மனைவியிடம் இருந்து பறித்ததால் ரவுடியுடன் சேர்ந்து காங்கிரஸ் அலுவலத்துக்கு தீவைத்த கணவர் கைது செய்யப்பட்டார்.
யாத்கிர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், இம்மாதம் 24ம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினருக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், அலுவலகத்தில் இருந்த நாற்காலி, சோபா உட்பட பொருட்கள் எரிந்து நாசமாகின.
வழக்குப் பதிவு செய்த யாத்கிர் நகர போலீசார், மாவட்ட மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவி மஞ்சுளாவின் கணவர் சங்கர் கூலி, ரவுடி பாபுகவுடா அகதீர்த்தா ஆகியோரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியது:
யாத்கிர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக 13 ஆண்டுகளாக மஞ்சுளா இருந்து வந்தார். இம்மாதம் 23ம் தேதி புதியவர்களுக்கு வழிவிடும் வகையில், தலைவர் பதவியில் இருந்து மஞ்சுளா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, சிறுபான்மையினரான நிலோபர் பதாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த மஞ்சுளாவின் கணவர் சங்கர் கூலி, தன் நண்பரும், ரவுடியுமான பாபு கவுடா அகதீர்த்தாவுடன் மது அருந்தினார்.
மது போதையில் இருவரும் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அலுவலக ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கைதான சங்கர் கூலி, அரசு மகளிர் பி.யு., கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

