Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் நுழைவு கட்டணம் உயர்வு

கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் நுழைவு கட்டணம் உயர்வு

கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் நுழைவு கட்டணம் உயர்வு


ADDED : மே 04, 2025 12:25 AM

Follow on Google

ADDED : மே 04, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாண்டியtt: மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணையின் பிருந்தாவனம், உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.

பிருந்தாவன் நுழை வாயில் கட்டணம், வாகன பார்க்கிங், பிருந்தாவன் பிரதான சாலை மேல்பாலத்தில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம், கர்நாடக கம்மர்ஷியல் அண்டு இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் கே.ஆர்.எஸ். பிருந்தாவனம் நுழைவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆறு வயதுக்கு மேற்பட்டோரின் நுழைவு கட்டணம் 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாகவும், மூன்று வயதில் இருந்து, ஆறு வயது வரையிலான சிறார்களுக்கு 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டெம்போ டிராவலர் மற்றும் மினி பஸ்களுக்கு 70 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக, பஸ்களுக்கு 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வு, மே 1ம் தேதியில் இருந்தே, அமலுக்கு வந்துள்ளது. இது சுற்றுலா பயணியருக்கு அதிருப்தி அளித்துள்ளது.

மேம்பால டோல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும், ஜீப்களுக்கு 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாகவும். டெம்போ டிராவலர், மினி பஸ்களுக்கு 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாகவும், பஸ்களுக்கு 100 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகவும், ஆறு சக்கர வாகனங்களுக்கு 150 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகவும், 10 சக்கர லாரிகளுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் டோல் கட்டணம் உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap