/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை தடுப்பில் மோதிய லாரி லட்சக்கணக்கில் மருந்துகள் நாசம்
/
சாலை தடுப்பில் மோதிய லாரி லட்சக்கணக்கில் மருந்துகள் நாசம்
சாலை தடுப்பில் மோதிய லாரி லட்சக்கணக்கில் மருந்துகள் நாசம்
சாலை தடுப்பில் மோதிய லாரி லட்சக்கணக்கில் மருந்துகள் நாசம்
ADDED : மே 27, 2025 11:39 PM

கொப்பால் : வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் சாலையில் சிதறி வீணாகின.
குஜராத்தின், ஆமதாபாத்தில் இருந்து மருந்து பாக்ஸ்களை ஏற்றிய லாரி, பெங்களூருக்கு புறப்பட்டது. இரவு முழுதும் உறங்காமல், டிரைவர் லாரி ஓட்டினார்.
கொப்பால் மாவட்டம், எலபுரகா தாலுகாவின், மாடலதின்னி கிராமத்தின் அருகில், நேற்று காலை சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை டிவைடரில் மோதி, சாலையில் சாய்ந்தது. அதில் இருந்த மருந்து பெட்டிகள், சாலையில் சிதறின.
விபத்தில் ஓட்டுநர் முகமது ஜாகிர் ஹுசேன், கிளீனர் முகமது பாஷா காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் லாரியில் இருந்து வெளியே மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாலையில் சிதறியதில் நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் வீணாகின. தகவலறிந்து அங்கு வந்த பேவூர் போலீசார், லாரியை நிமிர்த்தினர். போக்குவரத்தை சீராக்கினர்.
துாக்க கலக்கத்தில் டிரைவர் லாரியை ஓட்டியதால் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

