sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆடவள் அரங்கம்

/

ஆடவள் அரங்கம்

ஆடவள் அரங்கம்

ஆடவள் அரங்கம்


ADDED : ஜூன் 23, 2025 09:05 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரப்பரா...?



ஹாசன், சன்னராயபட்னாவில் உள்ள அடகுரு கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் - பூர்ணிமா தம்பதியின் மகள் ரித்வி, 14. இவர் சன்னராயபட்னாவில் உள்ள பி.ஜி.எஸ்., பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ரித்விக்கு 4 வயதாக இருக்கும் போது, யோகா செய்ய வேண்டும் என ஆசை இருந்துள்ளது.

இதனால், யு டியூப் மூலம் யோகா பயிற்சிகள் செய்ய முயற்சித்து வந்தார். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சிக்கமகளூரை சேர்ந்த நவீன் குமார் என்பவரிடம் ஆன்லனை மூலமாக பயிற்சிகள் பெற துவங்கினார்.

அதிகாலை


இந்த பயிற்சியின் போது, தன் எவ்வளவு கஷ்டமான விஷயத்திற்கு ஆசைப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டார். இருப்பினும், சிறு வயதிலே கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தினமும் அதிகாலை 4:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பயிற்சிகளில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்தார்.

இது போல, கடந்த ஐந்து ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறார். சிறுவயதிலே அதிகாலையில் எழுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.

இந்த பயிற்சிகளின் விளைவாக இவரது உடல் ரப்பர் போல வளைய துவங்கி விட்டது. தற்போது, கை, கால்களை பொம்மை போல சகட்டு மேனிக்கு திருப்புகிறார். இதை பார்க்கும் போதே அவர் உடலில் எலும்பு இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இவர் யோகாசனம் செய்வதற்காக உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார்.

பரிசுகள்


இவர், கடந்த சில ஆண்டுகளாக நடந்த மாவட்ட, மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள், பரிசுகளை வென்று உள்ளார். இந்த ஆண்டு மாநிலத்தை தாண்டி ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த யோகா போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றி பெற்றார். குறிப்பாக, யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் 2025ல் பங்கேற்று வெள்ளி பத்தகம் பெற்றார். இவர் செய்த பாக்ஸ் யோகா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாக்ஸ் யோகா என்பது ஒரு சிறிய பெட்டிக்குள் இருந்து கொண்டு, பல வகையான ஆசனங்களை செய்து காட்டுவது. இது மிகவும் கடினமான யோகா என கூறப்படுகிறது. இதற்கு காரணம், சில சமயங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.

துரித உணவு


இது குறித்து ரித்வியின் பெற்றோர் கூறியதாவது:

யோகா மூலம் தன் ஆரோக்கியத்தை மேம்படுத்த ரித்வி சில துரித உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டு விட்டாள். வரும் காலத்தில் சிறந்த யோகா ஆசிரியராக வருவாள். சர்வதேச அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். எதிர்காலத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டும். நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரப்பரா...?








      Dinamalar
      Follow us