Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யானை தாக்குதலுக்கு தீர்வு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உறுதி

 யானை தாக்குதலுக்கு தீர்வு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உறுதி

 யானை தாக்குதலுக்கு தீர்வு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உறுதி


ADDED : மார் 11, 2026 05:59 AM

Follow on Google

ADDED : மார் 11, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காண நேர்மையான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என மேல்சபையில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உறுதி அளித்து உள்ளார்.

மேல்சபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜ., உறுப்பினர் சுஜா குஷாலப்பா கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது:

யானை தாக்கி, பிப்., 28ம் தேதி 17 வயது சிறுமியும்; மார்ச் 9ல் வனப்பகுதிக்குள் வசிக்கும் 55 வயது பழங்குடியின பெண் இறந்ததும், மிகவும் வேதனை அளிக்கும் விஷயம். உயிர் மிகவும் விலை மதிப்பற்றது. அதற்கு எந்த விலையும் இல்லை. மனித - விலங்குகள் மோதலை தடுக்க, வனத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

யானைகளை கட்டுப்படுத்த பள்ளங்கள், சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இரண்டு யானை அதிரடி படைகள் செயல்படுகின்றன. தற்போது வன விலங்கு காப்பாளர், இரு யானைகளை பிடிக்க உத்தரவிட்டு உள்ளார்.

இவ்விரண்டு நிகழ்வுகளிலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 லட்சம் ரூபாய் இழப்பீடு, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும். யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காண நேர்மையான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap