/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டு வேலையை பறிகொடுத்த நர்சுக்கு ரூ.13.49 லட்சம் வழங்க உத்தரவு
/
வெளிநாட்டு வேலையை பறிகொடுத்த நர்சுக்கு ரூ.13.49 லட்சம் வழங்க உத்தரவு
வெளிநாட்டு வேலையை பறிகொடுத்த நர்சுக்கு ரூ.13.49 லட்சம் வழங்க உத்தரவு
வெளிநாட்டு வேலையை பறிகொடுத்த நர்சுக்கு ரூ.13.49 லட்சம் வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 23, 2025 11:27 PM
உடுப்பி: தவறான மருத்துவ அறிக்கை அளித்து, வெளிநாட்டு வேலை வாய்ப்பை இழக்க காரணமாக இருந்த டயாக்னஸ்டிக் சென்டர், ஆண் நர்சுக்கு 13.49 லட்சம் ரூபாய் வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உடுப்பியின் தனியார் மருத்துவமனையில் மூத்த ஸ்டாப் நர்சாக பணியாற்றுபவர் சிவகுமார் ஷெட்டிகார், 43. இவர் கடந்த பிப்ரவரியில், வளைகுடா நாட்டின் யுனைடெட் மெடிக்கல் ரெஸ்பான்ஸ் நிறுவனத்தில் நர்சாக தேர்வு செய்யப்பட்டார்.
பணி செயல் முறைக்காக, மங்களூரில் உள்ள தேசிய சிடி ஸ்கேனர் மற்றும் டயாக்னஸ்டிக் சென்டரில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். சென்டர் ஊழியர்கள் அவருக்கு 'ஹெபடைடிஸ் சி பாசிட்டிவ்' இருப்பதாக அறிக்கை அளித்தனர். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் பின், உடுப்பியின் தனியார் ஆய்வகம், உடுப்பியின் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இரண்டு ஆய்வகங்களிலும், ஹெபடைடிஸ் சி நெகடிவ் என்பது உறுதியானது.
தவறான அறிக்கையால், வெளிநாட்டுப் பணிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த சிவகுமார் ஷெட்டிகார், தேசிய சிடி ஸ்கேனர் மற்றும் டயாக்னஸ்டிக் சென்டர் மீது, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.
விசாரணையில், டயாக்னஸ்டிக் சென்டர், தவறான அறிக்கை அளித்தது உறுதியானது.
எனவே பாதிக்கப்பட்ட சிவகுமார் ஷெட்டிகாருக்கு, 13.49 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கும்படி நேற்று உத்தரவிட்டது. 45 நாட்களில் அவருக்கு பணத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என, டயாக்னஸ்டிக் சென்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.