/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ பணிகள் முடிந்ததும் தடுப்புகளை அகற்ற உத்தரவு
/
மெட்ரோ பணிகள் முடிந்ததும் தடுப்புகளை அகற்ற உத்தரவு
மெட்ரோ பணிகள் முடிந்ததும் தடுப்புகளை அகற்ற உத்தரவு
மெட்ரோ பணிகள் முடிந்ததும் தடுப்புகளை அகற்ற உத்தரவு
ADDED : செப் 25, 2025 11:03 PM
பெங்களூரு: 'மெட்ரோ பணிகள் நடந்து முடிந்த இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தற்காலிக தடுப்புகள், குப்பை உள்ளிட்டவற்றை உடனடியாக ஒப்பந்ததாரர்கள் அகற்ற வேண்டும்' என, மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த இடங்களில் உள்ள தற்காலிக தடுப்புகள், குப்பை உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட வேண்டும். இந்த பணிகளை ஒப்பந்ததாரர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த பணிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் நடத்த வேண்டும்.
அப்போது தான் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாது. இந்த பணிகள் நடக்கவிருந்தால் முன்கூட்டியே போக்குவரத்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த பணிகளை பொறுப்பு பொறியாளர் கண்டிப்பாக மேற்பார்வையிட வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும். இது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள், கனமழை போன்ற நேரங்களில் மட்டுமே பணிகள் செய்யாமல் இருக்க விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.