Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குப்பை வீசியதை தட்டிக்கேட்ட பேராசிரியர் மீது தாக்குதல்

குப்பை வீசியதை தட்டிக்கேட்ட பேராசிரியர் மீது தாக்குதல்

குப்பை வீசியதை தட்டிக்கேட்ட பேராசிரியர் மீது தாக்குதல்


ADDED : ஏப் 23, 2025 07:15 AM

Follow on Google

ADDED : ஏப் 23, 2025 07:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜே.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட் : பெங்களூரு, தயானந்த சாகர் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அரபிந்தோ குப்தா. நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

குமாரசாமி லே - அவுட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜே.ஹெச்.பி.சி.எஸ்., லே - அவுட் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கார் ஒன்று முந்திச் சென்றது.

காரில் இருந்தவர்கள் சாலையில் குப்பை, பாட்டில்களை கொட்டினர். இதனால் அரபிந்தோ குப்தா சற்று தடுமாறினார். கார் அருகில் சென்று, 'சாலையில் குப்பை கொட்டினால், மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுவர்' என்றார்.

இதனால் காரில் இருந்த மூவரும் கோபமடைந்து, கீழே இறங்கினர். அரபிந்தோ குப்தாவை இருவர் பிடித்துக் கொள்ள, ஒருவர் அவரை சரமாரியாக தாக்கினார். பின், அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அரபிந்தோ குப்தா அங்கிருந்தபடி குமாரசாமி லே - அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின், அவர் அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்தனர். அவரை தாக்கியவர்களை கண்டுபிடிக்க, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap