sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்

/

சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்

சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்

சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : சாமுண்டீஸ்வரியை தரிசிக்க கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கர்நாடக சேனா அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

கன்னட ஆடி மாதமான ஆஷாடா மாதம், இம்மாதம் 26ம் தேதி துவங்குகிறது. ஆஷாடா மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் மைசூரு சாமுண்டீஸ்வரியை தரிசிக்க பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவர்.

இதற்காக, 2,000 ரூபாயில் பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று கர்நாடக சேனா அமைப்பை சேர்ந்தவர்கள், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.

அப்போது, கட்டண உயர்வை திரும்ப பெறவும்; சாமுண்டி மலையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.




    • Dinamalar Events


    Dinamalar