/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் மருத்துவம் படித்த ராஜஸ்தான் டாக்டர்
/
கர்நாடகாவில் மருத்துவம் படித்த ராஜஸ்தான் டாக்டர்
ADDED : ஜூன் 14, 2025 11:06 PM

பெங்களூரு: குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான விபத்தில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரை சேர்ந்த டாக்டர் தம்பதி பிரதிக் ஜோஷி - கோமி, இவர்களின் மகள் மிரயா, 8, இரட்டை மகன்கள் நகுல், 5, பிரத்யுத், 5, ஆகியோரும் உடல் கருகி பலியாகினர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பு டாக்டர் தம்பதி, குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட 'செல்பி' புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
இந்நிலையில் பிரதிக் ஜோஷிக்கும், கர்நாடகாவுக்கும் தொடர்பு உள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. 2000 முதல் 2005ம் ஆண்டு வரை பெலகாவியில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லுாரியில், பிரதிக் ஜோஷி எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார்.
அதன் பின் கோலார் தமக்கா பகுதியில் உள்ள தேவராஜ் அர்ஸ் மருத்துவ கல்லுாரியில் கதிரியக்கவியல் துறையில் முதுகலை படிப்பும் முடித்தார். இதையடுத்து உதய்பூரில் டாக்டராக இருந்த அவர், 2021ல் லண்டன் சென்றது தெரிய வந்துள்ளது.
லண்டனில் இருந்தாலும் பெலகாவி, கோலாரில் தன்னுடன் படித்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். வாட்ஸாப் குரூப்பிலும் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.