/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறார்களுக்கு நொறுக்குத்தீனி பள்ளிக்கல்வி துறை திட்டம்
/
சிறார்களுக்கு நொறுக்குத்தீனி பள்ளிக்கல்வி துறை திட்டம்
சிறார்களுக்கு நொறுக்குத்தீனி பள்ளிக்கல்வி துறை திட்டம்
சிறார்களுக்கு நொறுக்குத்தீனி பள்ளிக்கல்வி துறை திட்டம்
ADDED : செப் 25, 2025 11:07 PM
பெங்களூரு: சுரங்க பாதிப்புள்ள மாவட்டங்களின் பள்ளி சிறார்களுக்கு மாலை நேரம், ஊட்டச்சத்தான நொறுக்குத்தீனி வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பத்தாம் வகுப்பு வரையிலான சிறார்களுக்கு, ராகி சத்துமாவு கலந்த பால் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்பட்டன. தற்போது ஐந்து நாட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் சுரங்க பாதிப்புள்ள மாவட்டங்களின் பள்ளி சிறார்களுக்கு, மாலை நேரம் ஊட்டச்சத்தான நொறுக்குத்தீனி வழங்க மாநில கல்வித்துறை திட்டம் வகுத்துள்ளது.
தசரா விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பின், திட்டம் செயல்படுத்தப்படும். பல்லாரி, சித்ரதுர்கா, விஜயநகரா, துமகூரு ஆகிய மாவட்டங்களின் அரசு பள்ளி சிறார்கள் பலனடைவர்.
சுரங்க பாதிப்பு பகுதிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, சிறார்களின் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தப்படும். சுரங்கத்தொழிலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களின் அனைத்து அரசு பள்ளிகளின், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரையிலான சிறார்களுக்கு, மாலை நேரம் தின்பண்டம் வழங்கப்படும்.
வாரம் ஒரு நாள், கே.எம்.எப்., நந்தினி மைசூர் பாக் அல்லது துாத்பேடா, வாரம் நான்கு நாட்கள் பழங்கள், இரண்டு நாட்கள் வேகவைத்த காய்கறிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.