/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் நாயக் திடீர் மரணம்
/
சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் நாயக் திடீர் மரணம்
ADDED : மே 27, 2025 11:48 PM

பெங்களூரு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கன்னட சின்னத்திரை நடிகர் ஸ்ரீதர் நாயக் நேற்று திடீரென மரணம் அடைந்தார்.
கன்னட சின்னத்திரை தொடர் நடிகர் ஸ்ரீதர் நாயக், 47. 'பாரு' என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தார். நடிகர் சுதீப்பின் மேக்ஸ் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, உடல் மெலிந்த தேகத்துடன் அவர் வெளியிட்ட வீடியோவில், 'பட வாய்ப்புகள் இல்லாதால், என்னிடம் பணம் இல்லை. சத்தான உணவு சாப்பிட முடியாததால், எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. திரையுலகினர் எனக்கு உதவ வேண்டும்' என்று கூறி இருந்தார்.
பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு, 'எடிமா' எனும் முகம், கை, கால்கள், வயிறு பகுதிகளை பாதிக்கும் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீதர் நாயக் மனைவி ஜோதி, தனது உறவினர் ஒருவரிடம் பேசிய மொபைல் போன் உரையாடல் வெளியாகி உள்ளது. அதில், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்ததாகவும் கூறுகிறார். இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

