/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காசநோய் இல்லாத மாநிலம் 'பி.சி.ஜி.,' தடுப்பூசி திட்டம்
/
காசநோய் இல்லாத மாநிலம் 'பி.சி.ஜி.,' தடுப்பூசி திட்டம்
காசநோய் இல்லாத மாநிலம் 'பி.சி.ஜி.,' தடுப்பூசி திட்டம்
காசநோய் இல்லாத மாநிலம் 'பி.சி.ஜி.,' தடுப்பூசி திட்டம்
ADDED : மார் 26, 2025 05:48 AM

சி.வி.ராமன் நகர்: ''கர்நாடகாவை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற, பி.சி.ஜி., தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்டுள்ளது,'' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
உலக காசநோய் தின விழிப்புணர்வு தினமான நேற்று, சி.வி.ராமன் நகர் பொது மருத்துவமனையில், காசநோயை தடுக்கும் 'பி.சி.ஜி.,' தடுப்பூசி திட்டத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
கர்நாடகாவில் 16 மாவட்டங்களில் பி.சி.ஜி., தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நோயை தடுப்பதில், இத்திட்டம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்.
கர்நாடகாவில் ஏற்கனவே 1,060 கிராம பஞ்சாயத்துகள், காசநோய் இல்லாத பஞ்சாயத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக காநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோய் நோயாளிகளுக்கு, 98,721 ஊட்டச்சத்து உணவு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நோய்க்கு எதிராக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, பி.சி.ஜி., தடுப்பூசி திட்டத்தை, பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடகாவில் 2024ல் 20 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளின் சளி பரிசோதனை செய்யப்பட்டன. இதில், 77,987 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறு மாதங்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், இறப்பு விகிதம் 8 முதல் 6 சதவீதமாக குறைந்துள்ளது.