தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மடாதிபதி உதவியை நாடியதில்லை'

 'மடாதிபதி உதவியை நாடியதில்லை'

 'மடாதிபதி உதவியை நாடியதில்லை'


ADDED : நவ 30, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''இரு முறை முதல்வராக இருந்த நான், அதிகாரத்தை இழக்கும்போது, மடாதிபதிகளின் உதவியை பெறவில்லை,'' என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என, ஒக்கலிக மடாதிபதிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக பெங்களூரில் நேற்று மத்திய அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:

நான் இரண்டு முறை முதல்வராக இருந்தேன். நான் அதிகாரத்தை இழக்கும்போது, எனக்கு உதவும்படி எந்த மடாதிபதிகளிடமும் கேட்டதில்லை. நான் ஒக்கலிக சமூதாயத்தினர் பற்றியோ அல்லது வேறு எந்த சமுதாயத்தினர் பற்றியோ பேசவில்லை.

சமூகத்தில் ஜாதி, மடங்களை அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்துவது சரியல்ல. மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும். 'ஜாதி அரசியல் செய்யக்கூடாது' என்று காங்கிரசார் கூறினர். ஆனால் இப்போது பெரியளவில் ஜாதி அரசியல் செய்யப்படுகிறது.

ஜாதி அரசியல், அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாது; மாநிலத்துக்கு தான் தீங்கு விளைவிக்கும். சமூகங்களுக்கு இடையே மோதலுக்கு வழிவகுக்கும். இது காங்கிரசுக்கு அவமானமல்ல; கர்நாடக மக்களுக்கு அவமானம்.

முதல்வரும், துணை முதல்வரும் காலை சிற்றுண்டி ஒன்றாக சாப்பிடும் நாடகம் நடக்கிறது. இவர்களுக்கு மாநில மக்கள் அதிகாரம் வழங்கி உள்ளனர். இரண்டரை ஆண்டுகளாக சித்தராமையா என்ன செய்தார்? முதல்வர் நாற்காலி பற்றி மட்டுமே விவாதம் நடக்கிறது.

மாநில மக்கள் பற்றி கவலையே இல்லை. இந்த அரசை பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us