Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் 142 ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவை!

 பெங்களூரில் 142 ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவை!

 பெங்களூரில் 142 ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவை!


UPDATED : பிப் 27, 2026 07:50 AM

ADDED : பிப் 27, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2026 07:50 AM ADDED : பிப் 27, 2026 05:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரில் ஒரு காலத்தில், ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடா, தொலை நோக்கு பார்வையுடன் ஏரிகளை அமைத்தார். ஆனால், நாளடைவில் நகர் மயமானதால், ஏரிகள் மூடப்பட்டன. அந்த இடங்களில் எல்லாம் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன் விளைவாக ஏரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

தற்போது, 200க்கும் குறைவான ஏரிகளே உள்ளன. இந்த ஏரிகள் ஒரே துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. பெங்களூரு மாநகராட்சி, வனத்துறை, பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், சிறிய நீர்ப்பாசன துறை என, பல துறைகளின் நிர்வகிப்பில் உள்ளன. அத்துடன், சரியான பராமரிப்பு இல்லாததால் ஏரிகள் பாழாகியுள்ளன. நீரும் மாசடைந்துள்ளது.

ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் பல முறை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், ஏரிகளின் சூழ்நிலை மாறவில்லை. 142 ஏரிகளின் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவை. குறிப்பாக சில ஏரிகளில், நீர்வாழ் உயிரினங்களும் வசிக்க முடியாது என்ற அதிர்ச்சிகரமான தகவல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 2025 ஏப்ரல் முதல், நவம்பர் வரை மாதந்தோறும் ஏரிகளின் நீரை சேகரித்து, மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் பரிசோதனை செய்தது. 142 ஏரிகளின் நீர் குடிப்பதற்கு தகுதியானதாக இல்லை. 142 ஏரிகளில், 92 ஏரிகளின் நீர் மிகவும் மோசமாக உள்ளது. சுத்திகரித்த பின்னரும், அதன் தன்மை மாறவில்லை. இவற்றில் நீர் வாழ் உயிரினங்களும் வாழ முடியாது.

சாக்கடை கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவுநீர், ஏரிகளில் கலப்பதே, நீர் அசுத்தமடைய காரணமாகும். இதனால், நிலத்தடி நீரும் அசுத்தமாகியுள்ளது. நீர் வாழ் உயிரினங்களின் உயிருக்கும் அபாயம் ஏற்படுகிறது.

மல்லேஸ்வரத்தின் சாங்கி, மாச்சோனஹள்ளி ஏரி, ஆந்த்ரஹள்ளி, மாதாவரா ஏரி, ராயசந்திரா ஏரி, மஹாதேவபு ரா ஏரி, சிக்ககுப்பி ஏரி, தொட்டகுப்பி ஏரி, வெங்கய்யன ஏரி உட்பட, பல ஏரிகளின் நீர் குடிப்பதற்கு தகுதியாக இல்லை .

சில ஏரிகளில் மிக அதிகமான பாசி கட்டியுள்ளது. இதன் விளைவாக நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. இது சூரிய ஒளி, ஏரியின் ஆழத்துக்கு செல்ல விடாமல் தடுக்கிறது.

இதனால், மீன்கள் உட்பட, நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. ஏரிகளை பாதுகாக்க, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us