Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மக்களுக்காக பணியாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

 மக்களுக்காக பணியாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

 மக்களுக்காக பணியாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்


ADDED : ஏப் 28, 2026 04:27 AM

Follow on Google

ADDED : ஏப் 28, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில், கே.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கத்தின், புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்தார்.

அவர் பேசியதாவது:

ஜனநாயக நடைமுறையில், மக்களே உண்மையான முதலாளிகள். நாங்களும், அதிகாரிகளான நீங்களும், மக்களின் சேவைக்காக இருக்கிறோம்.

சமுதாயத்தின் கடைகோடி நபரின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும். தனக்கு பதவி உயர்வு வேண்டும் என, ஒரு அதிகாரி என்னிடம் சீட்டு கொடுத்துள்ளார். தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மாறுகிறோம். ஆனால் நீங்கள் 30 முதல் 35 ஆண்டுகள் பணியாற்றுகிறீர்கள். ஓய்வு பெறும் வரை, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு, உங்களுக்கு கிடைத்துள்ளது. நமக்கு சம்பளம் கொடுப்பதே மக்கள் தான். சாக்குபோக்கு கூறாமல், மக்களுக்காக பணியாற்றுங்கள். அப்போது உங்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்.

சமுதாயத்தின் நாடித்துடிப்பை புரிந்து கொள்ளாவிட்டால், வளர முடியாது. படிப்பை விட பொது அறிவு மிகவும் முக்கியம். சமுதாயத்தை பற்றி தெரிந்தால் மட்டுமே, மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இன்றைக்கும் அதிகாரிகளுடன் பேச, கிராமப்புற மக்கள் அஞ்சுகின்றனர். இந்த பயத்தால் இடைத்தரகர்களை அழைத்து வருகின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், இடைத்தரகர்களின் தொந்தரவை கட்டுப்படுத்துங்கள். இடைத்தரகர்களின் தொந்தரவை தவிர்க்கும் நோக்கில், வாக்குறுதி திட்டங்களின் தொகை, நேரடியாக மக்களின் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap