/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கிகளின் கூடுதல் வட்டி வசூல்: ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுரை
/
வங்கிகளின் கூடுதல் வட்டி வசூல்: ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுரை
வங்கிகளின் கூடுதல் வட்டி வசூல்: ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுரை
வங்கிகளின் கூடுதல் வட்டி வசூல்: ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுரை
ADDED : ஜன 23, 2024 10:50 PM

புதுடில்லி: வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக வட்டி விகிதங்களை வசூலிக்க அனுமதிப்பதில், ரிசர்வ் வங்கி வாய்மூடி ஒரு பார்வையாளராக இருப்பதாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மன்மீத் சிங் என்ற நபர் பெற்ற கடன் சம்பந்தமான வழக்கில், உயர் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மன்மீத் சிங், 12.50 சதவீத வட்டி விகிதத்தில், 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு' வங்கியில் இருந்து 9 லட்சம் ரூபாய் கடனை மாறுபடும் வட்டி விகிதத்தில் பெற்றிருந்தார்.
வங்கியில் செலுத்த வேண்டிய கடன் தொகையை சரியான நேரத்தில் செலுத்திய பின், சிங் தன் கடன் கணக்கைச் சரிபார்த்தார்.
ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தின்படி, 17 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக வங்கி 27 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வங்கி குறைதீர்ப்பாளரை அணுகினார்.
மாறுபடும் வட்டி விகிதம் காரணமாக, கடன் பெற்ற காலத்தில், 16 முதல் 18 சதவீதம் வட்டி வசூலித்ததாக வங்கி தெரிவித்தது.
மேலும், இந்த மாறும் வட்டி விகிதத்திற்கு மன்மீத் சிங் ஒப்புக்கொண்டார் எனவும், சந்தை நிலவரங்களின் அடிப்படையில், வங்கிகள் வட்டி வசூலிக்க, ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதாகவும் வாதிட்டது.
வட்டி விகித மாற்றம் குறித்து, மன்மீத் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் வங்கி தெரிவித்தது.
ஆனால், இந்த நோட்டீஸ்கள் தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதால், அவரால் அவற்றை பெற்ற முடியவில்லை. இருப்பினும் குறைதீர்ப்பு மையத்தில் உரிய நீதி கிடைக்காததால் அவர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்ததாவது:
வாடிக்கையாளரிடம் இருந்து அதிகப்படியான வட்டி வசூலித்ததற்கான எந்த காரணத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை.மன்மீத் சிங், கடன் ஒப்பந்தத்தில் மாறுபடும் வட்டி விகிதத்தை செலுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறி, வங்கி அதன் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத நடவடிக்கையை மறைக்க முயற்சிக்கிறது.
வங்கி, வெளிப்படையான முறையில் வட்டி வசூலிக்கத் தவறிவிட்டது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வட்டி விகிதத்தில் மேற்கொள்ளும் எந்த மாற்றமும், வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல், செயல்படுத்த முடியாது.
சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, வட்டி விகிதங்களை வசூலிக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும், அவை வசூலிக்கும் பெரும் வட்டி விகிதத்தால், வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது ரிசர்வ் வங்கியின் கடமை. அது வாய்மூடி ஒரு பார்வையாளராக இருக்க முடியாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
வட்டி விஷயத்தில் வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கி, வாய்மூடி ஒரு பார்வையாளாராக இருக்க கூடாது

