/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பு இழந்தது எச்.டி.எப்.சி.
/
ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பு இழந்தது எச்.டி.எப்.சி.
ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பு இழந்தது எச்.டி.எப்.சி.
ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பு இழந்தது எச்.டி.எப்.சி.
ADDED : ஜன 18, 2024 11:35 PM

புதுடில்லி: எச்.டி.எப்.சி., வங்கி, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1.45 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளது. வங்கியின் பங்குகள் 11 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.
சமீபத்தில், வெளிவந்த எச்.டி.எப்.சி., வங்கியின் டிசம்பர் காலாண்டு முடிவுகள், முதலீட்டாளர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில், நேற்று முன்தினம் வங்கியின் பங்குகள் சரியத் துவங்கின.
இந்த சரிவு நேற்றும் தொடர்ந்தது. இதன் காரணமாக, நேற்று மும்பை பங்குச் சந்தையில் வங்கியின் பங்குகள் 3.26 சதவீதம் சரிந்து 1,487 ரூபாயாகவும்; தேசிய பங்குச் சந்தையில் 3.09 சதவீதம் சரிந்து, 1,490 ரூபாயாகவும் இருந்தது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வங்கியின் பங்குகள் 11.44 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வங்கி, அதன் சந்தை மதிப்பில் 1.45 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவில் வங்கியின் சந்தை மதிப்பு 11.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

