/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
யூனியன் பேங்க் ஐ.சி.எப்., புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
யூனியன் பேங்க் ஐ.சி.எப்., புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 27, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஐ.சி.எப்., தொழிற்சாலையில் 8,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கான சிறப்பு தனிப்பயன் சம்பளக் கணக்குகள் ஆரம்பிப்பது தொடர்பாக, பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் --- ஐ.சி.எப்., இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் வாயிலாக, ஐ.சி.எப்., ஊழியர்கள் தனிநபர் விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற முடியும் என, யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.