ADDED : ஜூன் 25, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ்' நிறுவனம், அதன் மும்பை சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த, கடன் பத்திர வெளியீடு வாயிலாக 8,600 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த தொகை விமான நிலையத்தின் வளர்ச்சி, நவீனமயமாக்கல் மற்றும் கையாளும் திறனை அதிகரிக்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விமான உள்கட்டமைப்பு துறையில் இதுதான் அதிக தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ள தனியார் கடன் பத்திர வெளியீடாகும். அமெரிக்காவைச் சேர்ந்த அப்போலோ பண்டு நிறுவனம் தான் அதிகபட்ச முதலீடு மேற்கொண்டுள்ளது. பிளாக்ராக், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன.