சீன அலுமினியம் பாயிலுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீன அலுமினியம் பாயிலுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி
ADDED : ஜூன் 21, 2025 01:08 AM

புதுடில்லி:சீனா, தைவான் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினிய பாயில் மற்றும் அசிட்ரோனிட்ரைல் ஆகியவற்றுக்கு, ஐந்தாண்டு பொருள் குவிப்பு தடுப்பு வரிகளை இந்தியா விதித்துள்ளது-.
நியாயமற்ற, மலிவான விலையில் இப்பொருட்களுக்கான வர்த்தக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சீனா, தைவான் மற்றும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5.5 முதல் 80 மைக்ரான் தடிமன் கொண்ட அலுமினிய பாயில், வேதிப்பொருளான அசிட்ரோனிட்ரைல் ஆகியவற்றின் மீது, மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரிகளை விதித்தது.
உள்நாட்டு தொழில் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறைவான விலையில், அளவுக்கு அதிகமாக இப்பொருட்களை மூன்று நாடுகளும் இறக்குமதி செய்திருப்பது தெரிய வந்தது. இதன்படி, மத்திய அரசு இந்த வரிகளை விதித்துள்ளது.