ADDED : ஜூன் 14, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:ரிசர்வ் வங்கியால், கடந்த 2020-21ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட மூன்றாம் கட்ட தங்கப்பத்திர கணக்கை முன்கூட்டியே முடிக்க விண்ணப்பித்தால், யூனிட் ஒன்றுக்கு 9,758 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கப்பத்திரங்கள், வெளியிடப்பட்ட நாளிலிருந்து, எட்டு ஆண்டுகளில் முதிர்வடையும். எனினும், ஐந்து ஆண்டுகளுக்கு பின் முதலீட்டை திரும்ப பெற அனுமதிக்கப் படும்.
இதன் அடிப்படையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரங்களை, நாளை முதல் திரும்பப் பெறலாம்.
இதன்படி திரும்பப் பெற விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த ஜூன் 11, 12, 13ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலை அடிப்படையில், கிராமுக்கு 9,758 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.