ADDED : ஜன 24, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு இதுவரை இல்லாத வகையில், 450 டன் அளவுக்கு, சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கிலோ ரூ.20க்கு விற்பனையானது.
திண்டுக்கல் புறநகரில் வெங்காய மார்க்கெட் உள்ளது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகள், ராசிபுரம், துறையூர் உள்ளிட்ட இடங்கள் மற்றும் மைசூரிலிருந்து சின்ன வெங்காயம் இங்கு வருகிறது.
வழக்கமாக 150 டன் அளவில் மட்டுமே சின்ன வெங்காயம் வரத்து இருக்கும். ஆனால், வரலாறு காணாத அளவில், நேற்று முன்தினம் 450 டன் அளவிலான வெங்காயம் வந்துள்ளது. மைசூரிலிருந்து மட்டும் 25 டன் வெங்காயம் வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம், பல்லாரி ஆகியவற்றின் விலை கிலோ 60 ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் விலை குறைந்துள்ளது.

