மொத்த மூலதன செலவினத்தில் 50% பங்கு வகிக்கும் 5 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை
மொத்த மூலதன செலவினத்தில் 50% பங்கு வகிக்கும் 5 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை
ADDED : ஜூன் 24, 2025 05:56 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மேற்கொள்ளவுள்ள மொத்த மூலதன செலவினங்களில், 50 சதவீதத்தை ஐந்து மாநிலங்கள் செய்ய உள்ளதாக, பேங்க் ஆப் பரோடா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவை அடங்கும். இந்த பட்டியலில் தமிழகம் இல்லை.
முக்கியத்துவம்
சாலைகள், நெடுஞ்சாலைகள், மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றை அமைப்பதற்கு செலவு செய்யப்படும் தொகை மூலதன செலவினம் எனப்படுகிறது.
இது போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் வளர்ச்சியை உருவாக்கும் என்பதால், இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த நிதியாண்டில், அனைத்து மாநிலங்களின் மொத்த மூலதன செலவினம் 8.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில் 10.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.