ADDED : செப் 26, 2025 01:23 AM

1,500
அ ணு உலை தொடர்பான விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, 1,500 கோடி ரூபாயில் பொறுப்பு நிதியை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அபாயத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, உலகளாவிய வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னைக்கு தீர்வாக, இதனை அரசு முன்னெடுத்து உள்ளது.
10,000
அ டுத்த 2 முதல் 3 ஆண்டுகள், பால் மற்றும் உணவு பதப்படுத்தல் உட்கட்டமைப்பை விரிவுப்படுத்த 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அமுல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
பால் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை இலக்காக நிர் ணயித்து உள்ளது. இதனை எட்டுவதற்கு, 10 - -12 பால், ஐஸ்கிரீம் மற்றும் உணவு தயாரிப்பு ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.