ADDED : மார் 25, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை; அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, சரிவில் இருந்து தற்போது மீட்சி கண்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு முடிவில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 85.50 என்ற அளவில் இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை காரணமாக, கரன்சி சந்தையில், டாலரின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இதனால், கடந்த பிப்ரவரியில் ரூபாயின் மதிப்பு, 88.10 என்ற அளவில் வரலாறு காணாத சரிவை சந்தித்தது.
இந்நிலையில், தொடர்ச்சியாக கடந்த 9 நாட்களாக ரூபாயின் மதிப்பு நிலையான உயர்வு கண்டு, நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, 85.50 ரூபாய் அளவுக்கு உயர்வை கண்டது. பிற ஆசிய நாடுகளின் கரன்சியை விட, மார்ச்சில் மட்டும் ரூபாய், 2.1 சதவீதம் உயர்வை பதிவு செய்துள்ளது.