தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்


ADDED : ஏப் 17, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரெனோவுக்கு இந்தியா மிக முக்கிய சந்தை'

ரெ னோ நிறுவனத்தின் உலக அளவிலான முதல் மூன்று சந்தைகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதே தங்கள் இலக்கு என, அக்குழும தலைமை செயல் அதிகாரி பிரான்சுவா ப்ரோவோஸ்ட் கூறியுள்ளார். இதற்காக, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஏழு புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.



வால்வோ கார் விலை மே 1 முதல் உயர்வு

ஸ் வீடன் நாட்டை சேர்ந்த, ஆடம்பர கார் தயாரிக்கும் 'வோல்வோ' கார் நிறுவனமானது, இந்தியாவில் மே 1ம் தேதி முதல் தங்கள் கார்களின் விலையை 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. உலகளாவிய வினியோக தொடர் சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுகிறது.

'அமிதாப் ஜுன்ஜுன்வாலாவுக்குரிலையன்சுடன் தொடர்பில்லை'

அ மலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் மூத்த அதிகாரி அமிதாப் ஜுன்ஜுன்வாலா, 2019ம் ஆண்டுக்கு பின் நிறுவனத்துடன் தொடர்பில் இல்லை என்று ரிலையன்ஸ் பவர் தெரிவித்துள்ளது. 'ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ்' மீதான வங்கி கடன் மோசடி வழக்கில் இவர் கைதாகியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us