பாக்கி தொகை பரிசீலிப்பு செய்தியால் வோடபோன் பங்கு விலை அதிகரிப்பு।
பாக்கி தொகை பரிசீலிப்பு செய்தியால் வோடபோன் பங்கு விலை அதிகரிப்பு।
ADDED : ஜூன் 25, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில், ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகையில், தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய 84,000 கோடி ரூபாயில், அரசு நிவாரணம் எதும் வழங்கவில்லை என்றால், நடப்பு நிதியாண்டுக்குள் வோடபோன் நிறுவனம் திவால் நிலைக்கு
தள்ளப்படும் என, அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வோடபோன் ஐடியா செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் குறிப்பிடத்தக்க நிவாரணம் வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, நேற்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், வோடபோன் ஐடியாவின் பங்குகள் 4.89 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்று 6.87 ரூபாய்க்கு வர்த்தகமாயின.