வெளிநாட்டு பயணங்களுக்கு காப்பீடு பெறுவது ஏன் அவசியம்?
வெளிநாட்டு பயணங்களுக்கு காப்பீடு பெறுவது ஏன் அவசியம்?
ADDED : மே 11, 2025 08:31 PM

விடுமுறை பயணம், வேலைவாய்ப்பு, குடும்பத்தினரை பார்க்க என பல்வேறு கார
ணங்களுக்காக இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது, பட்ஜெட், தங்குமிடம், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது போலவே, பயணக் காப்பீடு பெறுவதையும் முக்கியமாக கருத வேண்டும்.
ஏனெனில், வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படக்கூடிய பல வகை எதிர்பாராத இடர்களில் இருந்து பயணக் காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது. பயணக் காப்பீடு பெறுவதன் பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்.
விசா நடைமுறை:
பெரும்பாலான நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் பல, விசா பெறுவதற்கான நெறிமுறைகளில் பயணக் காப்பீட்டை குறிப்பிடுகின்றன. எனவே, பயணக் காப்பீடு பெற்றிருப்பது, விசா நடைமுறையை எளிதாக்கும்.முன்னதாகவே காப்பீடு பெற்றிருப்பது, கடைசி நேர திண்ட்டாட்டத்தை தவிர்க்க உதவும்.
மருத்துவ சிகிச்சை:
பயணக் காப்பீடு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, பயணத்தின் நடுவே எதிர்பாராமல் ஏற்படக்கூடிய மருத்துவ தேவைகளை ஈடுசெய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும். மருத்துவசிகிச்சைக்கான நிபந்தனைகளையும் கவனமாக படித்துபார்க்க வேண்டும்.
பயணம் ரத்து:
விமானம் ரத்து உள்ளிட்ட எதிர்பாராத பலகாரணங்களால், பயணம் ரத்தாக அல்லதுதாமதமாகும் வாய்ப்பு இருக்கிறது. இது, பயண ஏற்பாட்டை பாதிப்பதோடு, பொருளாதார இழப்பையும் உண்டாக்கும். பயணக் காப்பீடு, இத்தகைய இழப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.
லக்கேஜ் இழப்பு:
பயணங்களின் போது லக்கேஜ் தவறுவது எதிர்பாராமல் நிகழக்கூடியது. இதே போல, முக்கிய
ஆவணங்களையும் இழக்கும் நிலை ஏற்படலாம். விலை மதிப்புமிக்க தனிப்பட்ட பொருட்களையும் தவறவிடலாம்.இதனால் ஏற்படக்கூடிய செலவுகளுக்கு, காப்பீடு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சட்ட உதவி:
பாலிசி, பயணத்தின் கால அளவுக்கு பொருத்தமாக இருப்பது அவசியம். சாகச பிரியர்கள் எனில், சாகச விளையாட்டுகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பயணத் திட்டத்திற்கு ஏற்ற வகையிலான விரிவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பாலிசியை
தேர்வு செய்வது அவசியம்.