ADDED : செப் 22, 2025 01:23 AM

அப்பு, டவுனு, நியூட்ரன் எனும் மூன்று பேருக்கும் பங்கு சந்தை வர்த்தகமே பிரதான தொழில்
--
அப்பு:
என்ன டவுனு, போன வாரம் திங்கள்கிழமையும் வெள்ளிக்கிழமையும் உங்க வேலையை காண்பிச்சுட்டீங்களே!
டவுனு:
வாய்ப்பு கிடைச்சா விடமாட்டோமுல்ல...
அப்பு: வாராந்திர அளவுல, மூணு வாரமா பாசிட்டிவா போயிட்டிருக்கு. இந்த வாரம் உங்க வேலைய காண்பிச்சிடாதீங்க
நியூட்ரன்: சும்மா பழைய கதையை பேசாதீங்க. இந்த வாரம் வரவிருக்கும் பொருளாதார செய்திகளை பார்ப்போம்
அப்பு:
அப்போ அதை வரிசையா சொல்லுங்க
நியூட்ரன்: @@
இந்த வாரம் எச்.எஸ்.பி.சி., காம்போசைட் பி.எம்.ஐ., பேங்க் டெப்பாசிட்டில் வளர்ச்சி, பேங்க் தந்த லோன்களில் வளர்ச்சி, போரக்ஸ் ரிசர்வ்ன்னு ஒரு சில இந்திய டேட்டாக்கள் மட்டுமே வெளிவர இருக்குது. புதிய வீடுகள் விற்பனை, வீட்டு உபயோக சாதனங்களுக்கான ஆர்டர்கள், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், வேலையின்மை விகிதம், தனிநபர் வருவாய், தனிநபர் செலவு அப்படின்னு ஒரு சில அமெரிக்க பொருளாதார தரவுகளும் வர இருக்குது.
டவுனு:
இதையெல்லாம் விடுங்க, இந்த வாரம் அமெரிக்கா எச்.ஒன்.பி., விசா பிரச்சினை ஒண்ணு இருக்கே அது போதாதா?
அப்பு:
அதான் புதுசா அப்ளை பண்றவங்களுக்குதான்னு தெளிவுபடுத்தீட்டாங்களே? அதனால சந்தையில உடனடியா பெரிய பாதிப்பு எதுவும் வர்றதுக்கு வாய்ப்பில்லை. போன வாரம் 17 முக்கிய செக்டாருல 3 செக்டார் மட்டும்தான் கொஞ்சமா இறங்கியிருக்கு. சந்தை ஸ்ட்ராங்காத்தான் இருக்கு
டவுனு:
ஸ்ட்ராங்காமுல்ல ஸ்ட்ராங்கு! வாராந்திர அளவுல நிப்டி 25,275க்கு கீழே போனா, 25,101, 24,875, 24,722ன்னு சப்போர்ட் லெவல்கள் 200--250 பாயிண்டுக்கு அப்பாலல்லா இருக்குது?
அப்பு:
அடடா! சும்மா நெகட்டிவா பேசாதீங்க. 25,500, 25,675, 25,825னு ரெசிஸ்டென்ஸ் லெவலும்தான் ரொம்பவும் மேல இருக்கு. தவிர விக்ஸ் அதான் இந்தியா வாலைட்டலிட்டி இண்டெக்ஸ் 9.97-ல் கம்பர்ட்டபிளா இருக்கு. அதனால பெரிய இறக்கம் வருமுன்னு வழக்கமா காட்ற பயத்தை காட்டாதீங்க.
டவுனு:
பயங்காட்டல அப்பு. பெரிய பொருளாதார செய்தி ஏதும் இல்லாத வாரமா இந்த வாரம் இருக்கிறதால, எச்.ஒன்.பி., விசா மேட்டரை வச்சு வாரத்தை ஆரம்பிச்சுட்டு, வேறு ஏதும் நெகட்டிவ் செய்திகள் வந்துச்சுன்னா, சந்தையை ஒன்று இரண்டு நாட்களுக்கு கரடி இறுக்கிப் புடிச்சிக்க வாய்ப்பிருக்கு. அதனால வர்த்தகம் செய்றவங்க கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கன்னுதான் சொல்றேன்
நியூட்ரன்:
நீங்க ரெண்டு பேருமே எப்பவுமே இப்படித்தான். ஏறும், இறங்குமுனு போட்டி போட்டு பேசுவீங்க. அப்பு சொல்றாரு சந்தை ஸ்ட்ராங்கா இருக்குன்னு. டவுனு சொல்றாரு விசா மேட்டரால இறங்குமுனு.
நான் என்ன சொல்ல வர்றேன்னா, ஸ்ட்ராங்கா இருக்கிற சந்தையை நெகட்டிவ் செய்திகள் உடனடியா வீக்கா மாத்திடாது. பெரிய ஏற்றம் ஏதுமில்லாம இருக்கிற இடத்திலேயே கொஞ்சம் முன்னேயும் பின்னேயுமா வைக்கத்தான் வாய்ப்பிருக்கு. டவுனு சொன்ன மாதிரி, 25,275க்கு கீழே போனா மட்டும், கவனமா இருங்க டிரேடர்களே!
நியூட்ரன் முத்தாய்ப்பாக சொல்ல, மூவரும் கலைந்தனர்.
அப்பு:
ஆப்டிமிஸ்ட். விலைகள் ஏறும் ஏறியே ஆக வேண்டும் என்பதைத்தவிர, ஏதும் அறியாத, பேராசை கொண்டவர்
டவுனு:
பெசிமிஸ்ட். விலைகள் இறங்கும், இறங்கியேயாகும் என்பதைத்தவிர, ஏந்த ஒரு ஆசையும் இல்லாத கொள்ளை பயம் கொண்டவர்.
நியூட்ரன்:
ஏறுவதெல்லாம் இறங்குவதற்காகத் தான் ; இறங்குவதெல்லாம் ஏறுவதற்காகத் தான்; கடைசியில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது எனும் மகானுபாவன்.
இவர்கள் மூவரும் சேர்ந்து, வரும் வாரத்தில் சந்தை எப்படி இருக்கும் என்பதை பற்றி விவாதிக்கும் பகுதி இது.

