Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும் ?

 இந்த வாரம் எப்படி இருக்கும் ?

 இந்த வாரம் எப்படி இருக்கும் ?


ADDED : ஏப் 13, 2026 01:33 AM

Follow on Google

ADDED : ஏப் 13, 2026 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியுட்ரன்: வணக்கம் அப்பு, டவுனு. ஸ்வீட் எடுத்துக்குங்க!

டவுனு: என்ன ஸ்வீட்டோட ஆரம்பிகிறீங்க. சந்தை வாராந்திர அளவில ஏறுனதுக்கேவா?

நியுட்ரன்: ஹைதராபாத்திலிருந்து ஒரு நண்பர் வாங்கீட்டு வந்தாரு. மார்க்கெட்டும் நல்லா இருந்துச்சா. அதனால ஓப்பனிங்கிலேயே உங்களுக்கு ஸ்வீட் கொடுக்கலாமுன்னு.

அப்பு: இல்லையா பின்னே. போனவாரம் 1,559 புள்ளிகள் ஏத்தியிருக்கோம்.

டவுனு: திருத்தம். நாங்க 222 புள்ளி இறக்கியிருக்கோம். நிகர அளவில 1,337 புள்ளிகள்தான் ஏறியிருக்கு.

நியுட்ரன்: கொஞ்சம் தெம்பு வந்துடக்கூடாதே. உடனே ரகளையை ஆரம்பிச்சுடறது.

டவுனு: கூடவே பொறந்த குணம் போகவே போகாது.

நியுட்ரன்: என்னவோ போங்க. ஏற்றம் தொடர்ந்துட்டா நல்லா இருக்கும்.

டவுனு: அதுக்கு வாய்ப்பிருக்குற மாதிரிதான் தெரியுது. ஆனா அப்பப்ப நாங்களும் வந்து போவோம்.

நியுட்ரன்: இறக்குங்க. ஆனா சரிச்சுடாதீங்க.

அப்பு: இனி எங்க காலம்தான். அமைதியா இரண்டு பேரும் வேடிக்கை பாருங்க.

டவுனு: வர்ற வாரத்துல இன்ப்ளேஷன் ரேட், அன் எம்ப்ளாயின்மெண்ட் ரேட், பேலன்ஸ் ஆப் டிரேட், பயணியர் வாகன விற்பனை, பேங்க் லோன் மற்றும் டெப்பாசிட் வளர்ச்சி போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

வீடுகள் விற்பனை, ப்ரொட்யூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ், ஏற்றுமதி/இறக்குமதி விலை, வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, இண்டஸ்ட்ரீயல் ப்ரொடக்ஷன், போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

அப்பு: செவ்வாய் கிழமை சந்தைக்கு விடுமுறை.

நியுட்ரன்: மே 1ம் தேதியும் சந்தை விடுமுறை.

டவுனு: அதை ஏங்க இப்ப சொல்றீங்க.

நியுட்ரன்: அது வெள்ளிக்கிழமை. மூன்று நாள் தொடர் லீவு வருது. நாமெல்லாம் ஒரு டூர் பிளான் பண்ணலாமா?

அப்பு: ரொம்ப அட்வான்ஸா திட்டம் போடாதீங்க. சப்போர்ட் ரெசிஸ்டென்ஸை சொல்லுங்க.

நியுட்ரன்: சொல்லப்போறதில்லைங்க. ஏன்னா வாலட்டைலிட்டி அதிகமா இருக்கறதால சப்போர்ட்/ரெசிஸ்டென்ஸ் லெவல்கள் தாறுமாறா இருக்குது.

அப்பு: வர்ற வாரம் எப்படி போகும் டவுனு?

டவுனு: கேள்வியின் கடைசி வார்த்தையிலேயே இருக்குது பதில்.

அப்பு: அந்தக்காலமெல்லாம் மாறிடுச்சு.

நியுட்ரன்: அட! ஆரம்பிச்சுராதீங்க உங்க வாக்குவாதத்தை. கணிப்பை மட்டும் சொல்லுங்க.

டவுனு: வாலட்டைலிட்டி அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு. செய்திகள் எப்படி இருக்குங்கறதை பொறுத்துத்தான் அது இருக்கும்.



நியுட்ரன்: இதை சொல்ல டவுனு வேணுமா. நான் கூட இதை சொல்வேன். உங்க நிலைப்பாடு என்னன்னு சொல்லுங்க.

அப்பு: அதைத்தான் நானும் கேட்டேன்.



டவுன்: போன வாரம் மாதிரியே ரிப்பீட்டுதான். வார அளவில் பார்த்தா ஏற்றமும் நாள் கணக்குல பார்த்தால் ஓரிரு நாள் இறக்கமும் நடக்கலாம்.

அப்பு: அப்ப தோல்வியை ஒத்துக்கிறீங்க.

டவுன்: நியுட்ரன் ரொம்ப எகத்தாளம் ஜாஸ்தியாப்போகுது. பிப்ரவரி 27ல இருந்து கணக்கு வைச்சுக்குட்டா 27 டிரேடிங் நாட்கள். அதுல 13 நாள் இறக்கம். அந்த இறக்கத்துல மொத்தமா 5,439.20 புள்ளிகள் காலி. 14 நாள் ஏற்றம். அதுல மொத்தமா 3,993.25 புள்ளிகள் ஏற்றம். இன்னும் மீள வேண்டிய பாக்கியே 1,445.95 புள்ளிகள் இருக்குது. செய்திகள் எங்களுக்கு சாதகமா இருந்துச்சுன்னா எங்க பலத்தை மீண்டும் காட்டீடுவோம்.



நியுட்ரன்: பெரிசா ஏற இறங்கவெல்லாம் வேணாம். இப்ப இருக்கிற அளவில இருந்துட்டா அதுவே எனக்கு போதும்.

அப்பு + டவுனு: இப்படி நினைக்குறது அப்புறமா சந்தை என் கையிலேன்னு சவடால் பேசறதுக்குத்தானே - என்றனர் கோரஸாய்.

நியுட்ரன்: நான் பெருமைப்படற அளவுக்கு எதுவும் தப்பித்தவறியும் நடந்துடக்கூடாதே உங்க ரெண்டு பேருக்கும். ஸ்வீட் சாப்பிட்டோமுல்ல வாங்க ஒரு காரம் காபி சாப்பிடலாம் - என்று அழைக்க மூவரும் ஹோட்டலை நோக்கி புறப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us