
அனுமதி
புதிய பங்கு வெளியீடுக்கு விண்ணப்பித்த ஆறு நிறுவனங்களுக்கு சந்தை கட்டுப்பாட்டாளரான செபி நேற்று அனுமதி அளித்துள்ளது.
1. கனரா ரெபெகோ
2. ஹீரோ மோட்டார்ஸ்
3. பைன் லேப்ஸ்
4. ஒர்க்லா இந்தியா
5. மணிபால் பேமன்ட்
6. எம்.வி., போட்டோவோல்டிக் பவர்
திட்டம்
ரிலையன்ஸ் ரீடெய்ல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவான 'ரிலையன்ஸ் ஜியோ' அடுத்தாண்டு புதிய பங்கு வெளியீட்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அதனுடன் சேர்த்து 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' நிறுவனத்தை சந்தையில் பட்டியலிட தொழிலதிபர் முகேஷ் அம்பானி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
ஜியோ சந்தையில் பட்டியலான பிறகு, வரும் 2027ல், ரிலையன்ஸ் ரீடெய்ல் பங்குகள் பட்டியலிடப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விலை நிர்ணயம் ஜி.கே. எனர்ஜி
சோ லார் மின்சாரத்தில் இயங்கக் கூடிய மின் மோட்டார்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வரும் ஜி.கே.எனர்ஜி., புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 465 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 145 - 153 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் தொகையை, நீண்ட கால மூலதனமாக பயன்படுத்த உள்ளது. செப்.19 முதல் 23 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். செப்.26ல் இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
ஜிங்குஷால்
புல்டோசர், கிரேன் உள்பட பல்வேறு பழைய கட்டுமான இயந்திரங்களை புதுப்பித்து, உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் 'ஜிங்குஷால் இண்டஸ்ட்ரீஸ்', 116 கோடி முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர்கள் வசமுள்ள 9.6 லட்சம் பங்குகளுடன், 86.36 லட்சம் புதிய பங்கு விற்பனை வாயிலாக, இந்த முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 115 -- 121 ரூபாய் என நிர்ணயித்து உள்ளது. செப்.25 முதல் 29 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
சாத்விக் கிரீன்
சோலார் பேனல்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, குருகிராமை தலைமையிடமாக கொண்ட, 'சாத்விக் கிரீன் எனர்ஜி', 900 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. இதற்காக, பங்குதாரர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக 200 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 700 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. பங்கு ஒன்றின் விலை 442- - 465 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது. செப்.19 முதல் 23 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஆனந்த் ரதி
பங்கு வர்த்தகத்தில், தரகு நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆனந்த் ரதி, நடப்பு செப்ம்டபரிலேயே புதிய பங்கு வெளியீடு வாயிலாக 745 கோடி ரூபாயை திரட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பங்கு விற்பனை வாயிலாக திரட்டப்படும் முதலீட்டில், 550 கோடி ரூபாயை நீண்ட கால மூலதன தேவைகளுக்கு பயன்படுத்த உள்ளது. இதே குழுமத்தை சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான 'ஆனந்த் ரதி வெல்த்' கடந்த 2021ல் புதிய பங்கு வெளியீடு வாயிலாக சந்தைக்குள் நுழைந்தது. அப்போது, பங்கு ஒன்றின் விலை 550 ரூபாய் பட்டியலான நிலையில், 400 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டு, தற்போது அந்நிறுவன பங்கு விலை 3,021 ரூபாயாக உள்ளது.

