தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : மார் 31, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 01:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பயனீர் பில் - மெட்' விண்ணப்பம்


ர யில்வே உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான 'பயனீர் பில் - மெட்' நிறுவனம், 500 கோடி ரூபாய் மதிப்பில் ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இதில், 'ஆபர் பார் சேல்' முறையில், 250 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் வாயிலாக 250 கோடி ரூபாயும் திரட்ட அனுமதி கோரியுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்நிறுவனம், ரயில்வே இன்ஜின்கள், மெட்ரோ கதவுகள் மற்றும் காற்றாலைகளுக்கான முக்கிய பாகங்களை தயாரித்து வருகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதி, ராஜஸ்தானில் புதிய கியர் பாக்ஸ் மற்றும் காற்றாலை மின் இயற்றி தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க பயன்படுத்தப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



என்.எஸ்.இ., பங்குதாரர்களுக்கு அழைப்பு




ப ங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் தேசிய பங்கு சந்தை, தற்போதைய பங்குதாரர்கள், தங்கள் வசமுள்ள பங்குகளை 'ஆபர் பார் சேல்' முறையில் விற்க விருப்பம் உள்ளதா என மின்னஞ்சல் வாயிலாக கேட்க துவங்கியுள்ளது. விருப்பமுள்ள பங்குதாரர்கள், தங்களது பங்குகளை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருப்பத்தை, வரும் ஏப்ரல் 27ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டை நிர்வகிப்பதற்காக இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவாக 20 முதலீட்டு வங்கிகளையும், எட்டு சட்ட நிறுவனங்களையும் தேசிய பங்குச் சந்தை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



10% சரிந்த 'சென்ட்ரல் மைன்'

' கோ ல் இந்தியா' நிறு வனத்தின் துணை நிறுவனமான 'சென்ட்ரல் மைன் பிளானிங் அண்டு டிசைன் இன்ஸ்டிடியூட்' பங்குகள், நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் வர்த்தகத்திலேயே, பங்கு விலை 10 சதவீதத்துக்கும் மேல் சரிவை கண்டது. ஐ.பி.ஓ.,வின் போது, பங்கு ஒன்றின் விலை 172 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மும்பை பங்கு சந்தையில் 162.80 ரூபாய்க்கும், தேசிய பங்கு சந்தையில் 160 ரூபாய்க்கும் வர்த்தகத்தை துவங்கியது. வர்த்தகத்துக்கு இடையே அதிகபட்சமாக 11.45 சதவீதம் வரை சரிவு கண்டு 152.30 ரூபாய் வரை சென்றது. வர்த்தக நேர முடிவில், என்.எஸ்.இ.,யில் 10.44 சதவீதம் சரிந்து 154.06 ரூபாயாக நிறைவடைந்தது. இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 10,924 கோடி ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us