Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : டிரெண்டு முழுமையாக மாறி விட்டதாக கூற முடியாது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : டிரெண்டு முழுமையாக மாறி விட்டதாக கூற முடியாது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : டிரெண்டு முழுமையாக மாறி விட்டதாக கூற முடியாது


UPDATED : ஏப் 02, 2026 02:00 AM

ADDED : ஏப் 02, 2026 01:58 AM

Follow on Google

UPDATED : ஏப் 02, 2026 02:00 AM ADDED : ஏப் 02, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணிசமான ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து ஏற்றத்தில் நடைபெற்று, நாளின் இறுதியில் 348 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு குறைந்தபட்சமாக 1.73 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 4.62 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 3 குறியீடுகள் இறக்கத்துடனும், 16 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஹெல்த்கேர் இண்டெக்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 3.70 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1557295


வர்த்தகம் நடந்த 3,321 பங்குகளில் 2,935 ஏற்றத்துடனும்; 282 இறக்கத்துடனும்; 104 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. குறுகிய கால சராசரிகள் பலவற்றுக்கும் கீழே வர்த்தகமானாலும்கூட, 'புல்லிஷ் டைவர்ஜன்ஸி'யுடன் இருக்கும் ஆர்.எஸ்.ஐ., மற்றும் ரேட் ஆப் சேஞ்ச், ஓவர்சோல்டாக இருக்கும் ஸ்டோக்காஸ்டிக் போன்றவை நிப்டியில் வந்துள்ள ஷார்ட் டேர்ம் பவுன்ஸ் பேக்கானது தொடரக்கூடும் என்ற நிலைமையையே காட்டுகிறது.



அப்படி ஏற்றம் தொடர்ந்தால் 23,000 மற்றும் 23,500 வரை நிப்டி செல்லக்கூடும். ஒட்டுமொத்தமாக 'பியரிஷ் மொமென்டம்' இன்னமும் மறையாத சூழ்நிலை நிலவுவதால், ஏற்றம் வந்தாலுமே முழுமையாக டிரெண்ட் மாறிவிட்டது என்று உடனடியாக கூறிவிட முடியாது. செய்திகளே இதை நிர்ணயிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap