Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : 24,600- புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 24,600- புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 24,600- புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு


UPDATED : ஏப் 16, 2026 12:12 AM

ADDED : ஏப் 16, 2026 12:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2026 12:12 AM ADDED : ஏப் 16, 2026 12:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏற்றத்தில் ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து உயர்வு கண்டு, நாளின் இறுதியில் 388 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100' குறியீடு, குறைந்தபட்சமாக 1.72 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.54 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் உயர்வில் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு குறைந்த பட்சமாக 1.13 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் குறியீடு அதிகபட்சமாக 2.91 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1564473


வர்த்தகம் நடந்த 3,358 பங்குகளில், 2,836 ஏற்றத்துடனும்; 438 இறக்கத்துடனும், 84 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் குறுகிய கால அளவிலான ரெக்கவரி நடந்துகொண்டிருக்கிறது. மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., போன்றவை ஏற்றம் இன்னும் சற்று தொடர வாய்ப்பு இருப்பதையே காட்டுகின்றன. தற்போதைய நிலமையில் 24,600 என்ற லெவல் வரை நிப்டி செல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. 24,600-ஐ தாண்ட முடியாத அளவிற்கு விற்பனையின் அழுத்தம் அதிகரித்தால், டெக்னிக்கலாக மீண்டும் 23,800 வரை கீழே செல்லக்கூடும். செய்திகளின் பங்களிப்பு இதில் அதிகமாக இருக்கும்.

Image 1564474


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us